19:44

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி வரும் 16ம் தேதி சவுதாம்டன் நகரில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இதில் கார்டிப் நகரில் நடந்த முதல் டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விலா எழும்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இவர், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. இதனால் இரண்டாவது டெஸ்டில் அறிமுக வீரரான ஜாடே டெர்ன்பாச், 12வது வீரராக இடம் பிடித்தார். தற்போது காயம் குணமடைந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் ஆண்டர்சன் விளையாட உள்ளார்.12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:ஸ்டிராஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், அலெஸ்டர் குக், ஸ்டீவன் பின், இயான் மார்கன், கெவின் பீட்டர்சன், மட் பிரையர், சுவான், கிறிஸ் டிரம்லட், ஜோனாதன் டிராட்.
