22:57

சென்னை ரினோஸ் : கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று ஹைதராபாத்தில் இடம்பெற்ற திரைப்பட நடிகர்கள் பங்குகொண்ட செலிபிரிட்டி கிரிக்கெட் 20டுவெண்டி சீசன் இறுதி போட்டியில் வென்று சென்னை றைனோஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை எடுத்துள்ளது. சென்னை அணியின் சார்பில் சென்னை அணி சார்பில் விக்ராந்த் 66 ஓட்டங்களையும், விஷ்ணு 61 ஓட்டங்களையும் அதிரடியாக எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கர்நாடக அணி 165 ரன்களையே எடுத்தது. அவ் அணியின் சார்பில் கர்நாடக அணி சார்பில் பாஸ்கர் 67 ரன்களை எடுத்தார். சென்னை றைனோஸ் அணியின் பந்துவீச்சில் சாந்தனு 2 விக்கெட்டுக்களையும் ஜீவா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகளின் முதல் சீசனை சென்னை றைனோஸ் சுவீகரித்துக்கொண்டுள்ளது.
