04:11
பிரிட்டனை சேர்ந்த ஜென்சன் பட்டன் பார்முலா-1 கார் பந்தயமான கிராண்ட் பிறீஸ் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார்.
கனடாவில் நடந்த கிராண்ட் பிறீஸிலும் வெற்றி வாகை சூடினார். வாலன்சியா போட்டி நடைபெற உள்ள நிலையில் ஜென்சன் பட்டன் பெராரி அணிக்கு இந்த ஆண்டு இறுதியில் மாறப்போவதாக யூகச் செய்திகள் வந்துள்ளன. இந்த சேதி இளம் வீரர் பட்டனை அதிர்ச்சி அடையச் செய்தாலும் இது குறித்து அவர் கூறுகையில், பெராரி கிளப்பில் சேருகிறேன் என்பது நல்ல நகைச்சுவை என பதில் அளித்தார்.
பட்டன் தற்போது இருக்கும் மெக்லாரன் அணியிலேயே தொடர்ந்து நீடிப்பேன் என்றும் பல சாதனைகளை நிகழ்த்துவேன் என்றும் உறுதியளித்தார். இந்த 31 வயது வீரரின் முழுக்கவனமும் இவ் வாராந்தம் இறுதியில் நடைபெறும் வாலன்சியா (ஸ்பெயின்) போட்டியிலேயே உள்ளது என தெரிவித்தார்.
பெராரி அணி குறித்து நான் பேசவில்லை. இது ஒரு வதந்தி என பட்டன் திட்டமாக மறுத்தார். தற்போதைய சாம்பியன் செபாஸ்டியன் வெட்டலுடன் கடுமையாக மோதுவதிலேயே எனது கவனம் உள்ளது என ஜென்சன் பட்டன் தெரிவித்தார்.
நடப்பு சீசனில் தனது திறன் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. வரவிருக்கும் கிராண்ட் பிறீஸ் போட்டிகள் எதிர் பார்த்து உள்ளோம் என்றும் பட்டன் தெரிவித்தார்.
