02:28

நான் பார்த்த கிரிக்கட் வீரர்களில் சச்சினைப் போல ஒரு சிறந்த கிரிக்கட் வீரர் யாரும் கிடையாது என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
சர் டொனால்டு பிராட்மனை நான் பார்த்ததில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை இத்தனை ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த வீரரை நான் பார்த்ததில்லை என ரிச்சர்ட்ஸ் கூறினார்.
சச்சினைவிட சிறந்த வீரர் இதுவரை யாரும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார். பிராட்மனைப் பொறுத்தவரை 20 ஆண்டுகள் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இடையில் இரண்டாம் உலகப்போரால் சில ஆண்டுகள் விளையாடவில்லை. சச்சின் சர்வதேச கிரிக்கட்டில் ஏற்கனவே 22 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். பிராட்மன் 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களை அடித்திருந்தார்.
டெண்டுல்கர் கிரிக்கட்டின் அனைத்து வடிவங்களிலும், சர்வதேச அளவில் இதுவரை 99 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
