09:43
இந்தியாவின் சோம்தேவ் வர்மன், ஜேர்மனியின் டெனிஸ் கிரீமயரை எதிர்த்து ஆடினார். இதில் சோம்தேவ் 6-4, 4-2 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக டெனிஸ் விலகினார். இதனால் சோம்தேவ் 2வது சுற்றில் நுழைந்தார்.
பெண்கள் பிரிவில் நம்பர்1 வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-1 என்ற கணக்கில் ஸ்பெயினின் சன்டோன்ஜாவை தோற்கடித்தார். மரியா ஷரபோவா(ரஷ்யா) 6-2, 6-1 என்ற கணக்கில் சகநாட்டின் செக்வடசியை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் அனா இவானோவிக்(செர்பியா), வீனஸ் வில்லியம்ஸ்(அமெரிக்கா), நாலீ(சீனா) ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றில் நுழைந்தனர். செர்பியாவின் ஜெலினா ஜன்கோவிக், இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
கடந்த விம்பிள்டன் போட்டியில் ஜான் இஸ்னர்(அமெரிக்கா), நிக்கோலஸ் மகுத்(பிரான்ஸ்) ஆகியோர் மோதிய ஆட்டம் சுமார் 11 மணி நேரம் நடந்தது. இந்த முறையும் இவர்கள் நேற்று முதல் சுற்றில் மோதினர். பரபரப்பாக 2 மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 7-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
