22:24
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர்சீரிஸ் பாட்மின்டன் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், சீன தைபேயின் ஷயோ சியா செங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 21-8 என மிகச் சுலபமாக கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 10-21 என கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய செய்னா 19-21 என இழந்தார். இறுதியில் செய்னா 21-9, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இதன்மூலம் செய்னா நேவலின் "நடப்பு சாம்பியன்' அந்தஸ்து பறிபோனது.
