22:25
20 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் ஓய்வு குறித்து நினைத்ததில்லை. இப்போதும் மிக அதிகமாக கிரிக்கெட்டை நேசிக்கிறேன். அதுதான் எனது வேலை. கிரிக்கெட் இன்னும் என்னுடைய இதயத்தில் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. இப்போதும் அதே கனவுதான் உள்ளது. அதை நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது. உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற போது நான் களத்தில் இல்லை.
எனது தனிப்பட்ட சாதனை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அதிக ரன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. உலகக் கோப்பையில் வெற்றி பெற வேண்டும். உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தை கழுத்தில் அணிய வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இப்போது நிறைவேறி விட்டது என்றார்.
