03:19
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது.டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் டோனி, டிராவிட், லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன்சிங், அபினவ்முகுந்த், பிரவீண்குமார், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முனாப்பட்டேல் ஆகியோர் வெஸ்ட் இண்டீசில் இருந்து இங்கிலாந்து செல்கிறார்கள்.
டெஸ்ட் அணியில் இடம் பெற்ற காம்பீர், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், விக்கெட் கீப்பர் விர்த்திமான் ஆகிய 5 வீரர்கள் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டனர்.
இந்த 5 பேரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை. தெண்டுல்கர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளனர். ஷேவாக் அணியோடு பின்னர் இணைந்து கொள்வார்.
