
ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங்கில், இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், 65வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை ஏ.டி.பி., நேற்று வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், இரண்டு இடங்கள் பின்தங்கி 65வது இடம் பிடித்தார். இதற்கு, சமீபத்திய விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விரைவில் தோல்வி அடைந்து வெளியேறியதே காரணம்.
இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி (5வது இடம்), லியாண்டர் பயஸ் (8வது இடம்), ரோகன் போபண்ணா (10வது இடம்) உள்ளிட்ட இந்திய வீரர்கள் "டாப்-10' வரிசையில் நீடிக்கின்றனர்.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ரேங்கிங்கில், இந்தியாவின் சானியா மிர்சா, ஒற்றையரில் 63வது இடத்திலும், இரட்டையரில் 11வது இடத்திலும் நீடிக்கிறார்.