
இங்கிலாந்தில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 183 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது.
ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்களைப் பெற்றது.
மஹேல ஜயவர்தன 64 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 32.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக மஹிட் ஹக் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தம்மிக பிரசாத் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. அயர்லாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நேற்று ஸ்கொட்லாந்து அணியை அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வென்றது.