
லார்ட்ஸ் மைதானத்தில் 100வது சதத்தை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சின் வெறும் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவர் கடும் காய்ச்சலுடன் போட்டியில் விளையாடியது தெரிய வந்துள்ளது. அவர் ஆட்டம் இழந்ததும் நேரடியாக அவர் ஹொட்டலுக்கு சென்று விட்டார்.
காய்ச்சலுக்கான மாத்திரையை எடுத்து கொண்ட அவர் நீண்ட நேரம் உறங்கி ஓய்வெடுத்து கொண்டார்.
ஏற்கனவே ஜாகீர்கான் தசைபிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது சச்சின் காய்ச்சலால் அவதிப்படுவது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி மேலாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில்,"வைரஸ் காய்ச்சலால் சச்சின் அவதிப்படுகிறார். மருத்துவர்கள் அறிவுரைப்படி சச்சின் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவ சோதனைக்கு பின்னரே அவர் களமிறங்குவார்" என்றார்.