

÷458 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
÷இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
÷இரண்டாவது இன்னிங்ஸில் ரெய்னா, லட்சுமண், திராவிட் ஆகியோர் மட்டும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்களால் இங்கிலாந்தின் பந்து வீச்சில் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.
÷லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என்ற 4-வது நாள் ஸ்கோருடன் இந்திய அணி திங்கள்கிழமை பேட்டிங்கை தொடங்கியது. திராவிட் 34 ரன்களுடனும், லட்சுமண் 32 ரன்களுடனும் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கினர். மேலும் 2 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் திராவிட் 36 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஆண்டர்சன் பந்தில் பிரையரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
÷அடுத்து லட்சுமணுடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி நம்பிக்கை அளித்தது. அரைசதம் அடித்த, லட்சுமண் 56 ரன்களில் வெளியேறினார். இவரும் ஆண்டர்சன் பந்திலேயே அவுட் ஆனார். தொடர்ந்து ரெய்னா களம் இறங்கினார்.
சரிவு ஆரம்பம்: அடுத்த ஓவரிலேயே ஸ்வான், இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். 22 ரன்கள் எடுத்திருந்த கம்பீர், ஸ்வான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
÷தொடர்ந்து களம் இறங்கிய சச்சின், மிகவும் நிதானமாக விளையாடினார். 68 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்திருந்த அவர், ஆண்டர்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
ரெய்னா அரைசதம்: தொடர்ந்து ரெய்னாவும், கேப்டன் தோனியும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதானமாக விளையாடினார். சிறப்பாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்தார். தோனி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
÷அடுத்து வந்த ஹர்பஜன் சிங் 12 ரன்களிலும், பிரவீண் குமார் 2 ரன்களிலும் வெளியேறினர். சிறப்பாக ஆடி வந்த ரெய்னா 78 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். அடுத்து இஷாந்த் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 261 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஜாகீர்கான் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.
ஆண்டர்சன் அபாரம்: இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அவர் திராவிட், லட்சுமண், சச்சின், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோரை வீழ்த்தினார். பிராட் 3 விக்கெட்களையும், ஸ்வான், டிரெம்லட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பீட்டர்சன் ஆட்ட நாயகன்: இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்த கெவின் பீட்டர்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட், டிரென்ட் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
வீரர்கள் காயமடைந்ததால் தோல்வி: தோனி
ஜாகீர்கான், கம்பீர் ஆகியோர் காயமடைந்ததாலும், காய்ச்சலால் சச்சின் சரியாக விளையாட முடியாததாலும் தோல்வியடைந்து விட்டதாக இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியது: முதல் இன்னிங்ஸிலேயே ஜாகீர்கான் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவு. தொடர்ந்து கம்பீர் காயமடைந்தார். சச்சின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் வரிசையையே மாற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன, அதில் வெல்வோம் என்றார் தோனி.
"சிறப்பான ஆட்டத்துக்கு கிடைத்த வெற்றி'
எங்கள் அணியின் சிறப்பான ஆட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி பலம் வாய்ந்தது. அவர்களையே வெற்றி பெற்ற எங்கள் வீரர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அடுத்து வரும் போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவோம் என்றார் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ்.
சுருக்கமான ஸ்கோர்
இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸ்- 474/8
டிக்ளேர்
(பீட்டர்சன் 202*, பிரவீண் குமார் 5வி/106)
2-வது இன்னிங்ஸ்- 269/6 டிக்ளேர்
(பிரையர் 103*, பிராட் 74*)
இந்தியா
முதல் இன்னிங்ஸ்- 286
(திராவிட் 103*, பிராட் 4வி/37)
2-வது இன்னிங்ஸ் - 261
(ரெய்னா 78, லட்சுமண் 56
ஆண்டர்சன் 5வி/65,
பிராட் 3வி/57)
வெற்றி களிப்பில் இங்கிலாந்து வீரர்கள்.
