
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் இதுவரை 99 சர்வதேச சதங்களை விளாசி உள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள முதல் டெஸ்டில் அவர் 100வது சதத்தை பூர்த்தி செய்து மகத்தான சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கூறுகையில், ‘சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. எனது வெற்றியின் ரகசியமே அதுதான். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்தையும் அனுபவித்து விளையாட வேண்டும் என நினைப்பவன் நான். அப்படி விளையாடினால் சாதனைகள் தானாக வந்து சேரும்’ என்றார்.