
ஒரு நாள் போட்டிகளில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை ஐ.சி.சி நேற்று வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ்ம், மூன்றாவது இடத்தில் இலங்கையின் திலகரத்னே தில்ஷானும் உள்ளனர்.
அதன் பின் இந்திய வீரர் விராட் கோலி 733 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். கப்டன் எம்.எஸ்.தோனி 9வது இடத்திலும், சச்சின் 10வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்தின் வெட்டோரி முதல் இடத்திலும், ஜிம்பாவேயின் ரே பிரைஸ் 2வது இடத்திலும், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 3வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்ன் முதல் இடத்திலும், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் ஷாகித் அப்ரித் 3வது இடத்திலும் உள்ளனர்.