
செர்பிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நோவக் ஜோவிக் (செர்பியா) எந்த வித சிரமமும் இல்லாமல் முன்னேறினார்.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் ஜான்கோ திப்சரேவிக் தொடைப் பகுதியில் காயம் காரணமாக விலகினார். அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜோவிக் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் பெலிசியானோ லோபசை எதிர்த்து ஆடுகிறார்.

நோவக் இந்த ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை எனவே இன்று நடைபெறும் இறுதிப் போட்டி சுவாரசியம் மிக்கதாக அமையும்.
ஜோவிக் வெள்ளிக்கிழமை ஸ்லோவேனியாவின் பிளாஸ் காவ்சிக்கை தோற்கடித்தார். இந்த ஆண்டில் நோவக்கின் 26 வது ஆட்டத்தின் தொடர் வெற்றி ஆகும். 1986 ம் ஆண்டு இவான் லெண்டில் ஏடிபி தொடரில் 25 ஆட்டத்தில் தொடர் வெற்றி பெற்றிருந்தார்.