

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுவது போல், எல்.பி.எல். என்ற பெயரில் கிரிக்கட் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்.பி.எல். போட்டிகளில் வெளிநாட்டு கிரிக்கட் வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கான வீரர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கிழக்கு இலங்கை அணியின் கப்டனாக பாகிஸ்தான் வீரர் அப்ரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எல்.பி.எல். கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை "ஈ.எஸ்.பி.என். ஸ்டார்" நிறுவனம் பெற்றுள்ளதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜுலை 18 ம் திகதி முதல் ஆகஸ்ட் 17 ம் திகதி வரை எல்.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றன.