
பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், மிஸ்பா கைகொடுக்க பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.

சைமன்ஸ் அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேவன் ஸ்மித் (0) ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த சைமன்ஸ் (51), டேரன் பிராவோ (47) ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சாமுவேல்ஸ் (18), எட்வர்ட்ஸ் (18), டுவைன் பிராவோ (11) ஓரளவு கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 43.4 ஓவரில் 171 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ், சயீத் அஜ்மல் தலா 3, ஹபீஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
மிஸ்பா அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (5), அகமது ஷேக்சாத் (0), ஆசாத் ஷபிக் (0) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். அடுத்து வந்த மிஸ்பா (62*), உமர் அக்மல் (30), ஹமத் அஜாம் (36) கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 40.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரவி ராம்பால் 4, பிஷு 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக மிஸ்பா தேர்வு செய்யப்பட்டார். நான்காவது போட்டி வரும் மே 2ம் தேதி பார்படாசில் நடக்கிறது.