
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 6 வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10-வது ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (சனிக்கிழமை) எதிர்கொள்கிறது. மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
கொல்கத்தா அணி விளையாடும் 11-வது ஆட்டம் ஆகும். அந்த அணி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. இரு அணிகளும் 7-வது வெற்றியை பெறும் ஆவலில் உள்ளது. கொல்கத்தா அணி ஏற்கனவ சென்னையிடம் 2 ரன்னில் தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தா அணி விளையாடும். அரை இறுதி வாய்ப்பை பெற ஒவ்வொரு அணிக்கும் தான் ஆடும். எல்லா ஆட்டமும் முக்கியமானது. இதனால் இனிவரும் ஆட்டங்கள் எல்லாம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.