23:38
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் தெண்டுல்கர் அதிகபட்சமாக 37 ரன் எடுத்தார். டெக்கான் தரப்பில் ஆனந்த்ராஜன் 3 விக்கெட் டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை இந்தியன்ஸ் சந்தித்த 4-வது தோல்வியாகும். அந்த அணி ஏற்கனவே கொச்சி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளிடம் தோற்று இருந்தது. டெக்கான் அணி பெற்ற 4-வது வெற்றியாகும்.
அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 8 புள்ளிகளுடன் அந்த அணி 9-வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியால் தெண்டுல்கர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆடுகளம் குறித்து அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-ஆடுகளத்தில் பந்தை இறுக்கி பிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஏற்ற வகையில் நாங்கள் விரும்பிய வகையில் “பிட்ச்” இல்லை. டெக்கான் அணி பேட்டிங் செய்தபோது 19 ஓவர் வரை ரன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். கடைசி ஓவரில் தான் அதிகமான ரன் சென்றுவிட்டது. கடைசி நேரத்தில் போலார்ட்டும், ஹர்பஜனும் நெருக்கி கொண்டு வந்தார்கள். ஆனால் முடியாமல் போனது. எங்களது பந்துவீச்சு சரியாக அமையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் 13-வது “லீக்” ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20-ந்தேதி சந்திக்கிறது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் புனே வாரியர்சை நாளை சந்திக்கிறது.
