05:57
இந்தியன் வாலிபால் “லீக்” (ஐ.வி.எல்.) போட்டியின் 3-வது சுற்று ஏனாமில் நடைபெற்று வருகிறது. சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மராத்தா வாரியர்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் ஏனாம் டைகர்சையும் தோற்கடித்தன.நேற்று நடந்த 3-வது “லீக்” ஆட்டத்தில் ஐதராபாத் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை ஸ்பைக்கர்ஸ் 25-19, 23-25, 29-27, 14-25, 15-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை ஸ்பைக்கர்ஸ் 4-வது “லீக்” ஆட்டத்தில் இன்று (மாலை 3.30 மணி) கேரளா கில்லர்சை எதிர்கொள்கிறது. கேரளா கில்லர்ஸ் தொடக்க ஆட்டத்தில் ஏனாம் டைகர்சிடமும், 2-வது ஆட்டத்தில் கர்நாடகா புல்சிடமும் தோற்றது. நேற்றைய 3-வது ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் மராத்தா வாரியர்ஸ் அணியை வென்றது.
மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஐதராபாத் சார்ஜர்ஸ்- ஏனாம் டைகர்ஸ் மோதுகின்றன. ஐதராபாத் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் தோற்றது. ஏனாம் ஒன்றில் வென்று இரண்டில் தோற்றது. பெங்களூர் போட்டியில் வெற்றி பெற்ற மராத்தா வாரியர்ஸ் 3 ஆட்டத்திலுமே தோற்றது.
4-வது ஆட்டத்தில் இன்று (மாலை 6.30 மணி) கர்நாடகா புல்ஸ் அணியை சந்திக்கிறது. கர்நாடகா அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது, ஒரு ஆட்டத்தில் தோற்றது.
