
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெறுகிற ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா - ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி முன்னேறியுள்ளது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் நடியா - அனஸ்டாஸியா ஜோடி கடுமையாகப் போராடிய போதும் அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் சானியா ஜோடி வென்றது. காலிறுதிச்சுற்றில் சானியா - எலினா ஜோடி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள செக்.குடியரசின் வீட்டா பெஸ்கே - ஸ்லோவேனியாவின் கேத்தரினா செர்போட்னிக் ஜோடியை எதிர்கொள்கிறது.
பெஸ்கே - செர்போட்னிக் ஜோடி மிகவும் பலமான ஜோடி என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற சானியா ஜோடி கடுமையான சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். பெஸ்கே - செர்போட்னிக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 1-6, 10-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் லினோ டொமின்கஸ் - லாரா போஸ்டியோ ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.