
பற்மின்ரன் வீராங்கனைகள் போட்டியின் போது குட்டைப் பாவாடை அணிந்து விளையாட வேண்டுமென்ற புதிய விதிமுறையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக உலக பற்மின்ரன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உலக பற்மின்ரன் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் சீனாவில் 28 ஆம் திகதி நடக்கிறது.இதில் புதிய விதிமுறை குறித்து விவாதிக்கப்படுகிறது.அப்போது வீராங்கனைகளுக்கான குட்டைப் பாவாடை விதிமுறையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்று உலக பற்மின்ரன் சம்மேளன நிர்வாகி தெரிவித்துள்ளார்.