

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி சென்னையில் இன்று தெரிவு செய்யப்படுகிறது.
காயம் காரணமாக காம்பிர் விளையாடாதபட்சத்தில் தமிழக தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சேவாக் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், காம்பிரும் விலகினால் நல்ல தொடக்க ஆட்டக்காரர் தேவை என்று தேர்வுக்குழு கருதுகிறது.
சமீபத்தில் 12 முதல் தர கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள முகுந்த் 5 சதம் உள்பட 1211 ரன்கள் குவித்துள்ளார். கப்டன் டோனி, சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், ஜாகீர்கான் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 வது இடத்தைப் பிடிக்க சேதேஷ்வர் புஜாரா, உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், ஐ.பி.எல்.ல் சிறப்பாக ஆடி வரும் கோஹ்லி, பத்ரிநாத் ஆகியோருக்கு இடையில் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
இரண்டாவது விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேல் தெரிவு செய்யப்படலாம். அவரை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தலாம் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம். இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் 24 ம் திகதி தொடங்குகிறது.